தென்காசி,  செப்.23-

தென்காசியில் பள்ளிக்கல்விதுறை சார்பில் சர்வவதேச அமைதி தினவிழா நடைபெற்றது

தென்காசி  நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு  தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர் மாரியப்பன் நாலமை தாங்கினார்.தென்காசி  வட்டாரக்கல்வி அலுவலர் இள.முருகன்  வரவேற்றார். தென்காசி வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.


இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் குற்றாலம் எலைட் தலைவர் ஜெயமோகன்,  பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகக்குமார், முஸ்தபியா நடுநிலைப்பள்ளி தலைமைாசிரியர் ஜபருல்லாகான் , அய்யாபுரம் போராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் ஆரோக்கியச்சாமி , கிளை நூலகர் ஜெ.சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் . 


சாவதேச அமைதியை ஏற்படுத்திட ஐநா சபை ஏற்படுத்தும் நிகழ்வுகள் பற்றியும் சாவதேச அமைதி நாள் கடைப்பிடிப்பதின் அவசியத்தினையும் வட்டாரக்கல்வி அலுவலர் மாரியப்பன் தனது தலைமை உரையில் எடுத்துக் கூறினார். 
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் எலைட் தலைவர் ஜெயமோகன், தாவரங்கள் , விலங்கினங்கள் , மனிதர்கள் உள்பட அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டியதின் அவசியத்தினைக் கூறினார்கள்.


 வட்டாரக்கல்வி அலுவலர் இளமுருகன் அமைதி வழி கடைப்பிடிப்பதினால் நாம் அடையும் மேன்மைகளை எடுத்துக் கூறினார்கள்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் மத இன பாகுபாட்டினால் ஏற்பட்ட நீமைகளை எடுத்துக கூறி மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தினார். 
அலுவலக பணியாளர்கள் கந்தசாமி , பட்டமுத்து அமிர்தலிங்கம் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/