தென்காசி, செப்.27-
சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார  தினத்தை முன்னிட்டு தென்காசி ஆயிரப்பேரி பகுதியில் உள்ள குலசேகரப்பேரி குளத்துக்கரையில் 1200 பனை விதைகள் விதைப்பு செய்யும் பணி நடைபெற்றது.

சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார  தினத்தை முன்னிட்டு பாட்டப்பத்து -டால்பின் வாழ்வியல் அமைப்பு , கோதண்டராமபுரம் – சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ், கடையம் – பனையாண்மை -தற்சார்பு வாழ்வியல் & வளம் கூட்டும் வளர்ச்சிக்கான நடுவம் மற்றும் சங்கரன்கோவில்- ஆர்ட் ஆஃப் கிவ்விங் சாரிட்டபிள் ட்ரஸ்ட் அமைப்பு சார்பில் தென்காசி  மாவட்டம்பழையகுற்றாலம் ஆயிரப்பேரி அருகே உள்ள குலசேகரப்பேரி  குளத்துக்கரையில் 1200  பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது .


இந்நிகழ்ச்சிக்கு டால்பின் வாழ்வியல் அமைப்பு மற்றும் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ்  சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ச.சுரேஷ் தலைமை தாங்கினார். மாதவன் முன்னிலை வகித்தார் கார்த்திக்   வரவேற்று பேசினார் 
 சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சுரண்டை  காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் கவுரவ விரிவுரையாளராக பணிபுரியும் செ.ராஜ துறை  கருத்துரை வழங்கி பனை விதைகள் நடவு‌செய்யும் பணியை‌ துவக்கி‌ வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் டால்பின் வாழ்வியல் அமைப்பினர் மற்றும் ‌இயற்கை‌ ஆர்வலர்கள்  மனோஜ் பிரபாகரன்,  கார்த்திக் ராஜா, பொன் ராஜ், ஆனந்த், மகேந்திரன், சுபாஷ், பிரபாகரன், கவின், ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர் . பனை விதைகளை ‌நடவு‌ செய்த பனை ஆர்வலர்களுக்கு  ‌இயற்கை ஆர்வலர்கள் ஹைதராபாதில் குயிஸ்ட் டயாக்னாஸ்டிக்கில் பணிபுரியும் த.தினேஷ்  மதிய உணவு வழங்கினார்.


 இறுதியாக முருகேஷ் அனைவருக்கும  நன்றி கூறினார். 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/