தென்காசி, ஆக. 30-
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கேரள-தமிழக எல்லைப்பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்தன. இந்த வாரம் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.
புளியரை வாகன சோதனைச்சாவடி அருகே கொரோனா தடுப்பு மருத்துவ சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இலத்தூர் ஆரம்ப சுகாதார அலுவலர் டாக்டர் தமிழ்செல்வி தலைமையில், டாக்டர் மோதி, சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லையென்றால் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
நிருபர் நெல்லை டுடே