தென்காசி, சூலை 11-

கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு புளியரையில் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.  

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் பகுதியில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப் பட்டதன் காரணமாக தென்காசி மாவட்டம் புளியரையில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.


  சுகாதாரத்துறையினரால்  24 மணிநேரமும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் கேரளாவிலிருந்து வரும் சரக்கு வாகனம் மற்றும் இ. பாஸ் மூலம் வருகின்ற பயணிகளை ஆக்சிஜன் பரிசோதனை, காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் சளி பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை சுகாதாரத்துறை துணை இயக்குனர்  அருணா  பார்வையிட்டு பணியாளர்களுக்கு  அறிவுரைகளை வழங்கி  ஆய்வு மேற்கொண்டார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today