தென்காசி, நவ .22:
தென்காசி கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுப்பணியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ராமச்சந்திரன், தென்காசி டிஎஸ்பி மணிமாறன், தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 95 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தீயணைப்பு உபகரணம், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, முதலுதவிப்பெட்டி, படிக்கட்டு உயரம், சிசிடிவி கேமரா, வாகன இருக்கைகள், கதவுகள் உட்பட 16 வகையான சோதனைகள் செய்யப்பட்டன.
அவற்றில் 25 வாகனங்களில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அந்த குறைகளை சரி செய்ய உத்தரவிட்டனர். குறைகளை 2 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுவந்து, ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் 2 வாகனங்களுக்கு தகுதிச்சான்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. https://www.tnsta.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today