தென்காசி, ஆக.10:
தென்காசி மாவட்ட வேளாண்மைத்துறை மத்திய மாநில அரசு திட்ட வேளாண்மை துணை இயக்குநர் நல்லமுத்து ராசா தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டாரத்திற்கு பதிவு செய்யப்பட்ட உளுந்து விதைப்பண்ணை திடல்களை ஆய்வு செய்தார்.
அப்போது விவசாயிகளிடம் உளுந்து பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் கலவன் நீக்குதல் பற்றியும் உளுந்து விதைப்பண்ணை விவசாயிகளிடம் எடுத்து கூறினார்.
இந்த ஆய்வின் போது தென்காசி கடையநல்லூர் வட்டார உதவி விதை அலுவலர்கள் மாரியப்பன், நாகராஜன், முருகன் மற்றும் விதைப்பண்ணை விவசாயிகள் உடன் இருந்தனர்.
நிருபர் நெல்லை டுடே