தென்காசி, ஆக.3:
தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தென்காசி சசி மஹாலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் தென்காசி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மேனகா தலைமையில் நடைபெற்றது. தென்காசி வாலிபர் சங்க வட்டார செயலாளர் என்.கண்ணன் முன்னிலை வகித்தார் திருநெல்வேலி முன்னாள் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்து பேசினர்.
தென்காசி மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி பேரவை நோக்கத்தை பற்றி பேசினார் , பேரவை கூட்டத்தை முடித்து வைத்து வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா பேசினார். பேரைவையில் 10 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் . தென்காசி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி ஐசிஐ அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் கட்டிடப் பணிகளை நிறுத்திவிட்டு வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் புதிய தொழிற்சாலை களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. முடிவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தென்காசி மாவட்ட நிர்வாகி கனகராஜ் நன்றி கூறினார்..
நிருபர் நெல்லை டுடே