தென்காசி , டிச.9:


வாசுதேவநல்லூர் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு  யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் வழங்கினார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.1.40  லட்சம் மதிப்பு உள்ள நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கும்விழா வாசுதேவநல்லூர் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் 7 நபர்களுக்கு நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை  வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் வழங்கினார்.

விழாவில் உதவி தோட்டக்கலை அலுவலர் வைகுண்ட சாமி,உதவி தோட்டக்கலை அலுவலர் சண்முகவேல் ராஜன்,உதவி தோட்டக்கலை அலுவலர் கணேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய், வாசு பேரூர் செயலாளர் சரவணன்,மாவட்ட கவுன்சிலர் சந்திரா லீலா.

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கள் மாடசாமி, நல்லசிவன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும்  சிவகிரி பேரூர் செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு, விவசாயிகள் மற்றும் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர். https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today