தென்காசி, டிச. 30:

தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட செஷன்ஸ் (விரைவு நீதிமன்றம்) நீதிமன்ற அரசு வழக்கறிஞராக (குற்றப்பிரிவு) தென்காசி அருகேயுள்ள மின்நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளை கவனிக்க அரசு வழக்கறிஞராக தென்காசி வட்டம் குணராமநல்லூர் புளிச்சிகுளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.இருதயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி முதன்மை உதவி செஷன்ஸ் மற்றும் கூடுதல் உதவி செஷன்ஸ் நீதிமன்ற வழக்கறிஞராக (குற்றப்பிரிவு) வல்லத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.மாரிகுட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றம், கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் சிவில் வழக்கு அரசு வழக்கறிஞராக சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.அன்புசெல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக தென்காசி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சங்கரன்கோவில் உதவி அமர்வு நீதிமன்றம் மற்றும் உதவி செ~ன்ஸ் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக (குற்றப்பிரிவு மற்றும் சிவில்) மேலநீலிதநல்லூர் அருகேயுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பர். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. https://www.disctricts.ecourts.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today