செங்கோட்டை டிச, 22:

செங்கோட்டையை அடுத்துள்ள 0.1761 தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  வளாகத்தில் வைத்து பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கார்த்திக் கௌதம் முன்னிலை வகித்தார்கள அலுவலா் ஜான்கேப்ரியேல்  வரவேற்று பேசினார்.

விழாவில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் மேலாண்மை இயக்குநர் சுபாஷினி விவசாயிகளுக்கு பயிர்க்கடன்களை வழங்கினார். விழாவில் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொதுமேலாளா் பாஸ்கரன், தலைமையக மேலாளர் பாலமுருகன் ஆகியோர் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர்.

சங்க உறுப்பினா்களிடம் புதியதாக கடன் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில்  பஞ்சாயத்து தலைவா்கள் பெரியபிள்ளைவலசை வேல்சாமி, சுமைதீர்ந்தபுரம் அருணாசலம், தேன்பொத்தை ஜாபர்அலி, பிரானுார், வல்லம் ஆவுடையம்மாள், நிர்வாகக்குழு உறுப்பினா்கள் மணிவண்ணன், இசக்கிமுத்து, ரசியாள்பேகம், ராதா, செல்லம்மாள், சுப்பிரமணியன், களமேற்பார்வையாளா்கள் ரவிச்சந்திரன், திரவியகுமார், முருகராஜ், கல்யாண சுந்தரம், நாராயணன், வரதராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா் அருணாசலம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி செயலா் சங்கரகுமார்,சங்கரானந்தம், மணிகண்டன் துரைசண்முகம் அண்ணாமலை இசக்கி வைகுண்டராஜன் முருகேசன், மரகதம் ஆகியோர் செய்திருந்தனா். https://www.agritech.tnau.ac.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today