தென்காசி,  டிச.27:

பள்ளிக்கல்வித்துறை மற்றும் வ.உ.சி வட்டார நூலகம் இணைந்து நடத்திய பாபா ஆம்தே என அழைக்கப்படும்  முரளிதர் தேவிதாஸ் ஆம்தே பிறந்த தின விழா தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் இரா. மாரியப்பன்  தலைமை வகித்தார். கிளை நூலகர் ஜெ.சுந்தர்  வரவேற்புரை ஆற்றினார். 

இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரும் காந்தியவாதியும் ‘பாபா ஆம்தே’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான முரளிதர் தேவிதாஸ் ஆம்தே பிறந்த நாள் டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும், தனது இறுதி மூச்சு வரை பின்தங்கிய மக்களுக்காகவே பாடுபட்டு வந்தார் என்பது குறித்த செய்தியையும் வட்டாரக் கல்வி அலுவலர்  மாரியப்பன்எடுத்துரைத்தார். 

ஆம்தே’ வரோராவைச் சுற்றி ஐம்பது கி.மீ. சுற்றளவில் 11 தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், காந்தி அமைதிப் பரிசு, மகசேசே ஆகிய ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகள் அவரைத் தேடி வந்தன என்பன குறித்து நூலகர் சுந்தர் எடுத்துக்கூறினார். 

நூலகர் ராஜேஸ்வரி  நன்றியுரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி,  வாசகர் வட்ட நிர்வாகிகள், குழந்தையேசு, சலீம், முருகேசன் ஆகியோர்  செய்திருந்தனர். https://www.tnsocialwwelffare.org

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nell