தென்காசி, செப்.15-
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஊராட்சி ஒன்றியங்களில் 2284 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.


 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 14 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – 144 பதவியிடங்கள், கிராம ஊராட்சி தலைவர் – 221 பதவியிடங்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 1905 பதவியிடங்கள். 243 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.


 மாவட்ட ஊராட்சி தலைவர் – 1 பதவியிடம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் – 1 பதவியிடம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் – 10; பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் – 10 பதவியிடங்கள், கிராம ஊராட்சி துணைத்தலைவர் – 221 பதவியிடங்கள் ஆகியவற்றிற்கு மறைமுக தேர்தல்நடைபெற உள்ளது.


தென்காசி மாவட்டத்தில் 277 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 22 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 303 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக 10 பறக்கும் படை குழுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது.
 தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறை எண் 04633 – 290548; என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/