தென்காசி,  அக்.10:

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டப வளாகத்தில் வைத்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளா்கள் மாதந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.


 கூட்டத்திற்கு நகராட்சி துப்புரவு பணியாளா்கள் பிரிவு தலைவா் முருகன் தலைமைதாங்கினார். செயலாளா் காளியப்பன், செயற்குழு உறுப்பினா்கள் இசக்கி, வேல்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். பொருளாளா் சுப்பிரமணியன்  வரவேற்று பேசினார். 


கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு எஸ்சி,எஸ்டி அலுவலா் நலச்சங்க மாவட்டத்தலைவா் ஆசைத்தம்பி, மாவட்ட பொருளாளா் முருகன் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 1998ஆம் ஆண்டிலிருந்து நிரந்தர பணியாளாகள் நிலையில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள் பலர் ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். 


தமிழக முதல்வா்  முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இப்பிரச்சனையை ஆய்வு செய்து தகுதியான நிலையில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளா்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான பட்டியலில் இணைத்திட வேண்டும்.


நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு வீட்டு வாடகை மிகமிக அதிமாக நகராட்சியில் பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பிரச்சனையில் உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு துப்புரவு பணியாளா்களின் வீட்டு வாடகையை குறைத்திட வேண்டும்.


செங்கோட்டை நகராட்சியில் பணிபுரிந்து வந்த துப்புரவு பணியாளா்கள் பணிகாலத்தல் மரணமடைந்த சேகர், மாரியப்பன் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிட 12 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
ஆனால் 32 வாரங்கள் கடந்த பின்பும் மறைந்த அரசு ஊழியா்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை. இப்பிரச்சனையில் அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு மேற்காணும் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க உறுப்பினா் சீனியம்மாள் நன்றி கூறினார்.  

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/