தென்காசி, செப். 25-

மாஞ்சோலைக்கு சுற்றுலா சென்று விட்டு மாலை 6 மணிக்கு பிறகு  திரும்பி வந்த கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் 6 பேருக்கு வனத்துறையினர் ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலைக்கு சுற்றுலா சென்று வந்த கன்னியாகுமரி மாவட்ட  சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணிக்குப்பிறகு தாமதமாக மணிமுத்தாறு வன சோதனை சாவடியை வந்தடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு துணை இயக்குநர் மற்றும் வன உயரினக்காப்பாளர் அவர்களால் நபர் ஒன்றுக்கு ரூ.1000ம் வீதம் 6 நபர்களுக்கு ரூ.6000ம் இணக்க கட்டணமாக விதிக்கப்பட்டது. 


இனிவரும் காலங்களில் மாஞ்சோலைக்கு சென்று வரும் சுற்றுலாப்பயணிகள் மாலை 6 மணிக்குப்பிறகு மணிமுத்தாறு வன சோதனை சாவடிக்கு தாமதமாக வந்தடைந்தால் நபர் ஒன்றுக்கு ரூ.500 மற்றும் ரூ.1000ம் இணக்க கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாஞ்சோலை செல்லும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்து வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/