நெல்லை, ஆக.14:
ஒன்றியஅரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நெல்லை மாவட்ட நேரு யுவகேந்திராசார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையில் ஆரோக்கிய ஓட்டம் நடைபெற்றது. நெல்லைவ.உ.சி. மணிமண்டபம் அருகே மாநகராட்சி ஆணையாளர் ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நெல்லை மாவட்ட நேரு யுவகேந்திராசார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையில் ஆரோக்கிய ஓட்டம் நடைபெற்றது. நெல்லைவ.உ.சி. மணிமண்டபம் அருகே மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் கொடியசைத்து
ஆரோக்கிய ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சுசில் பரசுராம்பட் முன்னிலை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம், மாவட்ட
விளையாட்டு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஏராளமான இளைஞர்கள், மாணவமாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றனர். வ.உ.சி மணிமண்டபம் அருகில் இருந்து ஓடத்தொடங்கியவர்கள் நெல்லை டவுன் ரத வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் மாநகராட்சிக்கு வந்து ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிருபர் நெல்லை டுடே