தென்காசி, சூலை 19-
நெல்லை வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கத்தின் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கினார். ராம்ஜி வரவேற்றார். சங்க பொதுச்செயலாளர் திலகர், செயல் தலைவர் நாகூர், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அரசு அனைத்து துறைகளிலும் உள்ள எஸ்.சி., எஸ்.டி.பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மாவட்ட ஆதிதிராவிடர் நல குழுவில் எஸ்.சி., எஸ்.டி. அரசு பணியாளர்களை முறையாக பங்கேற்க செய்து 3 மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தென் மண்டல பொறுப்பாளர் ஆசைத்தம்பி, நிர்வாகிகள் முத்துலட்சுமி, உமாதேவி, கண்ணன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பொதுப்பணித்துறை பொறியாளர் மாயாண்டி குமார் நன்றி கூறினார்.
நிருபர் நெல்லை டுடே