தென்காசி,  டிச.9:

தென்காசி மாவட்ட காவல்துறையினர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர்  பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

மாணவ மாணவிகள் தங்களுக்கு பள்ளி கல்லூரிகளிலோ அல்லது  வெளியிலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பெற்றோர்களிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ உடனே தெரிவிக்க வேண்டும். மாணவிகள் அனைவரும் தங்களின் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். ஆபத்து காலங்களில் காவல்துறையினரின் உதவியை இதன் மூலம் எளிதில் பெற முடியும்.

மேலும்  ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக 1098 என்ற தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். https://www.tnpolice.tn.gov.in, https://www.tnschools.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today