தென்காசி, அக்.20:

தென்காசி மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-


தென்காசி மாவட்டத்தில் நாளை  21.10.2021 வியாழக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.  இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது.


இதை மனதில் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய பொது மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/