தென்காசி, நவ. 24:

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறை மூலம் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் அரசின் நலத்திட்டங்களான  இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி பெறுவதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரயில் நகர், தென்காசி-627811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today