தென்காசி, சூலை 12-
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய விருது வழங்கப்பட்டது. செங்கோட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய விருது வழங்கப்பட்டது . இந்த விருதினை அகில இந்திய காந்திய இயக்கத்தலைவர் தலைவர் வி . விவேகானந்தன் செங்கோட்டை அரசு பொது மருத்துவமனையின் டாக்டர் ராஜேஷ் கண்ணனிடம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் காந்தியவாதிகள் ராம்மோகன், ஆதிமூலம், கணேஷ்பாபு ஆகியோர் பாராட்டி பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஞானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய காந்திய இயக்கத்தலைவர் விவேகானந்தன் காந்திய விருது பற்றி கூறும்போது, செங்கோட்டை பொது மருத்துவ மனை திருவிதாங்கூர் அரசு காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் பழமைவாய்ந்தது . இன்று பல்வேறு உட் கட்டமைப்பு கட்டிடங்களுடன் நவீன மயமாக்கப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது. பல்வேறு மருத்துவப் பிரிவுடன் சுகாதாரத்துக்கும் சிறந்த சிகிச்சைக்கும் முதலிடம் கொடுத்து மக்கள் சேவையில் முன்னணி வகிக்கிறது .
ஒன்றிய அரசு 2021 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் முதன்மை மருத்துவ மனையாக தேர்வு செய்து காயகல்ப் விருது வழங்கியது. இதனைப் பாராட்டி அகில இந்திய காந்திய இயக்கம், காந்திய விருது வழங்கி பெருமைப்படுகிறது என்று கூறினார். முடிவில் செங்கோட்டை அரசு பொது மருத்துவமனை டாக்டர் ராஜெஷ் கண்ணன் நன்றி தெரிவித்தனர்.
நிருபர் நெல்லை டுடே