தென்காசி, மே 31- தென்காசி மற்றும் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இலவசமாக காய்கறிகளை வழங்கினார். 
தென்காசி நகர காவல்துறை சார்பில் தென்காசி மேல வாலியன் பொத்தை பகுதியைச் சேர்ந்த 250 ஏழை, எளிய குடும்பங்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுகுணா சிங் வழங்கினார். இதில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜ், தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல் துறை சார்பில், 500 குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்து. ஆலங்குளம் ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுகுணா சிங் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இலவச காய்கறிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.  துணை காவல் கண்காணிப்பாளர்   பொன்னி வளவன் முன்னிலை வகித்தார். ராஜீவ் நகர் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம், காமராஜர் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களுக்கு காவல்துறையுடன் இணைந்து வியாபாரிகள் காய்கறிகள் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நிருபர் நெல்லை டுடே