தென்காசி, மே 31-
அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் குற்றாலம் தென்காசி பகுதிகளில் ஏழை எளிய ஆதரவற்ற முதியோர் உள்ளிட்ட 100 – கும் அதிகமான நபர்களுக்கு தினமும்  மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அன்னை நல்வாழ்வு ட்ரஸ்ட் சார்பாக குற்றாலம், காசிமேஜர்புரம் இலஞ்சி குமாரர் கோவில்,  குடியிருப்பு நன்னகரம், மேலகரம், தென்காசி பழைய பேருந்து நிலையம், பாம்பே ஸ்டோர்,  கோவில் வாசல்,  தினசரி மார்க்கெட், வாய்க்கால் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ள ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்ற சாமியார்கள்  ஆகியோருக்கு தினமும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
  அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி  பி.ராஜேந்திரன்  குற்றாலம் சண்முகம்,  சுப்ரமணியபுரம்  ஏ.பரமானந்த ராஜ் ஆகியோர் உணவு வழங்கிக் வழங்கி வருகின்றனர்.
இக்கட்டான இந்த நேரத்தில் பசியால் தவிக்கும் ஏழை எளிய மக்களை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று நாள் மே தோறும் 150 கும் மேற்பட்ட நபர்களுக்கு மதிய உணவு வழங்கிவரும்  அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

நிருபர்
நெல்லை டுடே