தென்காசி, ஆக.23:
செங்கோட்டையில் அரசமரம் அறக்கட்டளை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
செங்கோட்டையை அடுத்துள்ள பெரியபிள்ளைவலசை சமுதாய நலக்கூடத்தில் வைத்து மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் திருநெல்வேலி டாக்டா் அகர்வால் கண் மருத்துவமனை, விசுவநாதபுரம் அரசமரம் அறக்கட்டளை மற்றும் வல்லம் நேஷனல் பப்ளிக் ஸ்கூல், ஷிபா மெடிக்கல் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமிற்கு சமூக ஆர்வலா் பொறியாளா் இ.வேல்சாமி தலைமைதாங்கினார்.
நேஷனல் பப்ளிக் ஸ்கூல் தாளாளா் அப்துல்மஜீத் முன்னிலைவகித்தார். அரசமரம் கண்பார்வை குறைபாடு மற்றும் பார்வையற்றோர் சேவை அமைப்பின் நிறுவனத்தலைவா் மன்சூர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து திருநெல்வேலி டாக்டா் அகர்வால் விழி ஒளி ஆய்வாளா்கள் சிஞ்சு, கரோலின், அனிஷா ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முகாம் முதன்மை மேலாளா் ஏஎஸ்.மாணிக்கம் மற்றும் அறக்கட்டளை பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா்.
நிருபர் நெல்லை டுடே