தென்காசி, நவ. 13:

2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால்  நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக  கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வகை தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்: ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ஐடிஐ-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் அலய்டு தொழிற்பிரிவில் ஓரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
இரண்டாம் வகை திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:
திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒருவருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை ஆகஸ்ட் 2018க்கு முன் சேர்க்கை பெற்றவர்:
ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
நான்காம் வகை பிற விண்ணப்பதாரர்:

1 .விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி செய்திருக்கவேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
2. தொழிற்பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு/ உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
3. ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டில் எஸ்சிவிடி  திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த வகையின்; கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து என்டிசி  பெறலாம்.
மேற்கண்ட நான்கு வகைகளிலும் தனித்தேர்வராக ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும் விண்ணப்பத்தாரர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள அத்தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்கவேண்டும்.

தகுதியுள்ள I, III & IV வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் பாடத்தில் 14.12.2021 அன்றும், செய்முறை) தேர்வு 15.12.2021 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்படும்.

கருத்தியல் தேர்வு விளக்க வகையில்  இடம்பெறும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும்.  இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜூன் 2022-ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் முதல் வருட தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

 தொடர்ந்து தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு என்சிவிடிஇ புதுடெல்லி மூலம் தேசிய தொழிற்சான்றிதழ்  வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் இது தொடர்பான பிற விவரங்கள்  www.skilltraining.tn.gov.in      என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.200- செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு, கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22.11.2021-க்குள் தென்காசி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும் கூடுதல் விவரங்களை உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் பேட்டை, திருநெல்வேலி என்ற முகவரியில் செயல்படும் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0462-2342432, 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.  www.skilltraining.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today