நெல்லை, ஆக.4:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், காவல் துறை, சிறைக்காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு கடந்த 26-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெண் போலீஸ்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பாளையங்கோட்டை செயிண்ட்.சேவியர் கல்லூரி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடந்து வந்தது. இதில் 1,320 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு  பாளையங்கோட்டை செயிண்ட்சேவியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 488 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 482 பேர் கலந்து கொண்டனர். 

அவர்களுக்கு நீளம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம், கிரிக்கெட் பந்து அல்லது குண்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன.

இதேபோல் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு 301 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 247 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today