தென்காசி, செப். 15-
செங்கோட்டையில் தீயணைப்பு மீட்பு படையினர் மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது மற்றும் மழை வெள்ளங்களில்  சிக்கியவர்களை மீட்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
செங்கோட்டை தீயணைப்பு  மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பாக எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள இரட்டைக் குளத்தில் மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுபடி, உதவி மாவட்ட அலுவலர் வெட்டும் பெருமாள்  தலைமையில் செங்கோட்டை நிலைய அலுவலர் சிவசங்கரன்  குழுவினர், செங்கோட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் பொதுமக்களுக்கு மழை  மற்றும் வெள்ளம் காலங்களில் பாதுகாப்பாக இருப்பதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து, செந்தில்குமார், ராம்குமார், ராஜா, மணிகண்டன் ஆகியோர் இணைந்து செயல்முறை விளக்கம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/