தென்காசி, அக். 9:


தென்காசி மாவட்டத்தில் உரம் தொடர்பான குறைகேட்பு பிரிவு  வேளாண்மை இணை இயக்குநர் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் கடைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அனைத்து விற்பனையாளர்களும் உர மூடைகளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை  விலைக்கு அதிகமான விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.  கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட உரம் விற்பனை தொடர்பான விதி மீறல்களை தெரிவிக்க தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் குறைகேட்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


அலுவலக நாட்களில் உரம் தொடர்பான புகார்களை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்கள் 04633-295430, 04633 – 210269 ஆகியவற்றில் காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணிவரை தெரிவிக்கலாம் மேலும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) த. ஆதிநாதனை 97917 92915 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.


மேலும் விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/