தென்காசி, ஆக. 24:

தென்காசி மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் 2021 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நாளை (25.08.2021)  காலை 11 மணிமுதல் பகல் 1 மணிவரை காணொளிகாட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

தென்காசி மற்றும் செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி, வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், மற்ற வட்டார விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் கலந்து கொண்டு காணொளி வாயிலாக தங்களது விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயனடைய வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today