தென்காசி,  சூலை 27:


நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாநில துணை தலைவர் பெரும்படையார், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமையில், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்மனு வழங்கினர்.
அம்மனுவில்  அவர்கள் கூறியிருப்பதாவது :
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள யார்கோல் அணையை அகற்ற வேண்டும்.
 மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாட்டை நீக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today