தென்காசி, சூலை 26:
தென்காசி மாவட்டம் மேக்கரையில் அடவிநயினார் அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழையால் அணை முழுக்கொள்ளளவான 132 அடியை எட்டியது.
தற்போது அணைக்கு வரும் 43 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, இலத்தூர், வடகரை,
ஆய்க்குடி, கம்பளி, கணக்கப்பிள்ளைவலசை, குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, சீவநல்லூர், சாம்பவர்வடகரை, சுரண்டை உள்பட 18 கிராமங்களில் உள்ள 43 குளங்களுக்கு செல்லுகிறது.
அடவிநயினார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிருபர் நெல்லை டுடே