தென்காசி, டிச.25:
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-FPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண். வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc. in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 9எப், செயிண்ட். தாமஸ் ரோடு, மகாராஜ நகர், திருநெல்வேலி-11 என்ற முகவரியில் இயங்கும் மண்டல அலுவலகத்தை 0462-2572772 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. https://www.tnagrisnet.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today