தென்காசி, அக். 1:
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது பரவல் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்நிலையில், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் போது அறிவிப்பு வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/