நெல்லை,  நவ.16:

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து குழுவின் முதலாவது கூட்டம்  கே.டி.சி. நகர் கீழநத்தத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வலட்சுமி அமிதாப் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கவுன்சிலர்கள் தனித்தங்கம், சாலமோன் டேவிட், மகேஷ்குமார், சத்யவாணிமுத்து, அருள் தவசு, கிருஷ்ணவேணி, கனகராஜ், லிங்கசாந்தி, ஜான்ஸ் ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் தங்களது பகுதி கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் அருணாச்சலம், மாவட்ட பஞ்சாயத்து செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கி கூறினர். கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கவேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க புதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளை சந்தித்து எளிதாக தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வசதியாக மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலியாக இருக்கும் முன்னாள் கருவூல அலுவலகத்துக்கு மாற்றவேண்டும். மேலும் புதிய மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் கட்டவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today