தென்காசி, டிச.13:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தென்காசி மாவட்டத்தின் சார்பாக புவி வெப்பமாதலை தடுக்கும் பொருட்டும் மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டும் விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தின் சார்பாக புவி வெப்பமாதலை தடுக்கும் பொருட்டும் மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தென்காசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தென்காசி கோட்டத்தின் செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி உபகோட்டப் பொறியாளர் எஸ்.. அன்னராஜூ தலைமை தாங்கினார். செங்கோட்டை உதவி கோட்டப் பொறியாளர் ஜி.குத்தாலிங்கம் முன்னிலை வகித்தார். ஆய்க்குடி உதவி மின் பொறியாளர் ஆர்.முகம்மது உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மின் பொறியாளர்கள் ஷேக் உமர் பரூக், களஞ்சியம், முகம்மது அலி, சண்முகவேல், சுப்பிரமணியன், இஸ்மாயில், ஜெயினுலாபதீன், முருகன், முப்புடாதி, உதவி வரைவாளர் ஏ.கணேசன் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி வடக்கு உதவி மின் பொறியாளர் இசக்கிமுத்து நன்றி கூறினார். https://www.tnebltd.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.todayEdit