தென்காசி,  செப்.22-


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலசை, பாலா அருணாசலபுரம், கரடிகுளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது கம்பனேரி கிராம பஞ்சாயத்து ஆகும். 


வலசை கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த தேர்தல் வரை வாக்களித்து வந்தனர்.
 இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு கருதி அனைத்து வாக்குச்சாவடிகளும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்றி உள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலசை கிராமத்தில் தக்கம்மாள் கோவில் தெரு பகுதியில் குடியிருக்கும் வாக்காளர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்தநிலையில், வாக்குச்சாவடி மாற்றத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் மற்றும் சுவரொட்டி ஒட்டி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/