தென்காசி, நவ. 26:

தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடிக் கல்வி” விழிப்புணர்வு  கலைப் பயண நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கோபால சுந்தரராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்று  காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலங்களில் பள்ளி குழந்தைகளின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் ஐந்து குழுக்களாகப் பிரிந்து இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய விழிப்புணர்வு கலைப்பயணத்தை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரகாட்டம் ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளோடு இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் தென்காசி மாவட்டத்தில் 35 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, பள்ளி தலைமையாசிரியர் செந்தூர் பாண்டியன், வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்குநர் சுரேஷ்குமார், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.education.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today