தென்காசி டிச 6:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலான விலையில் விற்பனையானது.

கனமழை காரணமாக வரத்து அடியோடு குறைந்ததால் மின்னல் வேகத்தில் தக்காளி விலை எகிறி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகம் ஆனதால் மீண்டும் தக்காளி விலை ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையானது. இதைப்போல் மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது. ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி பெரிய மார்க்கெட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவு வரத்தாகி வந்தது.

கடந்த சில நாட்களாக கன மழை எதிரொலியாக வ உ சி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் கத்திரிக்காய், பீன்ஸ், பட்ட அவரை, முருங்கைக்காய்,  ஆகிய காய்கறிகளின் விலை  கிலோ சதத்தை தாண்டியது. குறிப்பாக முருங்கைக்காய் விலை கிலோவுக்கு விண்ணைத் தொடும் அளவுக்கு விலை எகிறியது. நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150 க்கு விற்பனையானது.

இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200 க்கு விற்பனை ஆனது. இதனால் காய்கறி வாங்க பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு நேதாஜி பெரிய மார்க்கெட்டில் தினமும் 3 டன் முருங்கைக்காய் வரத்து வந்தது. தற்போது மழை எதிரொலியாக வரத்து குறைந்து  350 முதல் 500 கிலோ வரை மட்டுமே வரதாகி உள்ளது. இதன் காரணமாகவே இன்று முருங்கைக்காய் விலை உயர்ந்தது. இதேபோல் மற்ற காய்கறி விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

ஈரோடு மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:- கத்திரிக்காய் – 130, பீன்ஸ் -100, பீர்க்கங்காய், புடலங்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் – 80,முட்டைக்கோஸ் – 50, கேரட் – 70,  பீட்ரூட் – 80, பட்ட அவரை – 100, கருப்பு அவரை – 130 – 150, சின்ன வெங்காயம் – 50, பெரிய வெங்காயம் – 45, தக்காளி – ரூ.100 முதல் 120 என்ற விலையில் விற்பனையானது.  https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today