தென்காசி, நவ. 8:
தென்காசி மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்து வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முத்திளங்கோவன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in,
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today