தென்காசி, டிச.6:

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை சார்பாக பிலிம் ஆரோ – 2021 ஆவணப்பட திருவிழா நடைபெற்றது. ஆய்க்குடி ஜெ‌பி.கல்லூரி வளாகத்தில்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் இவ்விழா ஆரம்பமானது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திடத்தை மையமாக வைத்து மூன்றாமாண்டு காட்சி தொடர்பியல் துறை மாணவன் விணுவர்தன் தயாரித்த லைப் ஆப் பினோமினல் ஒர்க்கேர்ஸ் என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. 

இந்த விழாவில் ஜெபி.கல்லூரி முதல்வர் முனைவர் மைக்கேல் மரிய தாஸ் , அட்மினிஸ்டேட்டர்  ஹேம்லட் ஆகியோர் தலைமை தாங்கினர். காட்சி தொடர்பியல் துறை தலைவர் ஏ.வினு, பேராசிரியர்கள் எஸ்.வாசுகி மற்றும் பி.தங்கராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் இந்த ஆவணப்படத்தை பற்றிய கலந்துரையாடலும் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை ஜெபி கல்லூரி மாணவர்கள்   செய்திருந்தனர். https://www.jpcas.edu.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today