தென்காசி, அக். 23:

தென்காசி மாவட்டத்தில்  நடைபெற்ற யூனியன் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

அதன்படி தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக வல்லம் சேக் அப்துல்லா, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தெற்கு மேடு திருமலை செல்வி, கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவராக காவிரி சீனித்துரை, கடையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக செல்லம்மாள் முருகன், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக வலசை சுப்பம்மாள்,

வாசுதேவநல்லூர் ஒன்றிய குழு தலைவராக பொன். முத்தையாபாண்டியன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக விஜயலட்சுமி (மதிமுக), சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லாலா சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக மாதவி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில் விஜயலட்சுமி தவிர மற்ற அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tenkasi.nic.in , https://www.eic.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today