தென்காசி, செப். 28:


குற்றாலத்தில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில்  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பா.ஜ.க. அரசை  கண்டித்து ஏர் கலப்பை மற்றும் நெற் கதிருடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 குற்றாலம் அண்ணாசிலை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர் தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.முத்துராமலிங்கம், தென்காசி தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குட்டி என்ற சங்கர், துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், செங்கோட்டை காதர் அண்ணாவி,வீரமணி, ராஜேந்திரன், குருவிகுளம் சேர்மன் க. பாலசுப்பிரமணியன், அருணாசலம், குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தென்காசி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் கோ.சாமித்துரை  வரவேற்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக பேரூர் செயலாளர்கள் குற்றாலம் எஸ்.மந்திரம், மேலகரம் இ.சுடலை, மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் குற்றாலம் இரா.பேச்சிமுத்து, துணை அமைப்பாளர்கள் கண்ணன், சுரேஷ், சுந்தர்ராஜ், முத்துவேல்.


தங்கபாண்டியன், செல்வம், மீராக் கனி, வீட்டு வசதி சங்க தலைவர் குற்றாலம் சுரேஷ், பூல்பாண்டியன், ராமமூர்த்தி, வீரபாண்டியன், கருப்பசாமி, குமாரசாமி, பால்ராஜ், மிசாசண்முகம், விஜய், செண்பகம், குத்தாலிங்கம், சுப்புராஜ், பழனி, ராமர், இரா.மாரியப்பன் என்ற கருணாநிதி, சோமசுந்தரம், கருப்பையா, மாரியப்பன், 
வனராஜன், நாராயணன், லட்சுமணன், அமானுல்லா, தங்கம், கிருஷ்ணன், முருகையா, ரமேஷ், வெள்ளத்துரை, தளவாய் குட்டி, முஜிபூர் ரகுமான், அப்துல் ரஹீம், ரகுமான், முகம்மது பாத்திமா, முகமது, அமீரம்மாள், ரெசவு பீவி, ரெசவுபாத்திமா, மைமூன், மசூது, செளரால் பீவி,  பர்கானா உட்பட பலர் கலந்து கொண்டனர். 
ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் பண்டாரசிவன் நன்றி கூறினார். https://www.dmk.org

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/