தென்காசி,  செம்.21-

புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம் போன்றவற்றில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர்  தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தென்காசி மேலமாசிவீதி, கொடிமரம், மவுண்ட் ரோடு, கூலக்கடை பஜார், ஹவுசிங் போர்டு, கீழப்புலியூர், வாய்க்கால் பாலம், மலையான் தெரு, காட்டுபாவா பள்ளி அருகில் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர தி.மு.க. செயலாளர் சாதிர் தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாமிதுரை,  விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் கோமதி நாயகம், மதிமுக நகர செயலாளர் என். வெங்கடேஸ்வரன்,
கம்யூனிஸ்டு கட்சி அயூப்கான், கணேசன், த.மு.மு.க. சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலம-புலியருவி ரோட்டில் குற்றாலம் தி.மு.க. செயலாளர் மந்திரம் தலைமையில் நடந்த போராட்டத்தில் வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன்,  மாரியப்பன் என்ற கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இலஞ்சி ஜூபிலி 3வது தெருவில் இலஞ்சி தி.மு.க செயலாளர் முத்தையா பாண்டியன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

சுரண்டையில் அண்ணா சிலை முன்பு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து 234 மீட்டர் நீள கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் முன்னிலை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/