தென்காசி, சூலை 6-


வாசுதேவநல்லூர் அருகே நடைபெற்ற மாவட்ட வாலிபால் போட்டியில் அருகன்குளம் அணி முதலிடம் பெற்று வெற்றி கோப்பையை தட்டிச்சென்றது.


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அருகன்குளம் மைதானத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 25 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் இனாம் கோவில்பட்டி அணியும், அருகன்குளம் அணியும் மோதின. இப்போட்டியில் அருகன்குளம் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அருகன்குளம் அணிக்கு வெற்றி கோப்பை மற்றும் முதல் பரிசாக ரூ.8,000த்தை வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன். முத்தையா பாண்டியன் வழங்கினார். இரண்டாமிடம் பெற்ற இனாம்கோவில்பட்டி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7,000த்தை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் வழங்கினார்.


நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக வர்த்தக அணி அமைப்பாளர் இராஜகுரு, அருகன்குளம் கிளை திமுக செயலாளர் இராஜகோபார், ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today