தென்காசி,  அக். 21:

இண்டர்நேஷனல் ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் இரண்டு மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற  இறகுபந்து போட்டியில் இலஞசி அணி முதலிடம் பெற்றதது.

கடையநல்லூர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிகளை இண்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், உலக சாதனையாளருமான  ரொட்டேரியன் முகமது ஹபீபு துவக்கி வைத்தார். பீர் முகமது, அப்துல்காதர், பார்த்தசாரதி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் திருநெல்வேலி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், தென்காசி, இலஞ்சி, சுரண்டை, சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 36 அணிவீரர்கள் பங்கேற்றனர். நடுவராக பக்கீர் மைதீன் செயல்பட்டார். 


இந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற இலஞ்சியை சேர்ந்த பாண்டி மற்றும் அஜய் அணிக்கு 7 ஆயிரம் ரூபாயும், பரிசு கோப்பைகளையும், இரண்டாம் பரிசு பெற்ற வள்ளியூரை சேர்ந்த முத்துப்பாண்டி, ஜெனோ அணிக்கு 5 ஆயிரம் ரூபாயும். பரிசு கோப்பை களையும்,  மூன்றாம் பரிசு அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஸ்ரீதர் ஜெரோமி அணிக்கு 3 ஆயிரம் ரூபாயும், பரிசு கோப்பைகளையும், நான்காம் பரிசு கடையநல்லூரை சேர்ந்த அருணாச்சலம். இலட்சுமணன் அணிக்கு 1500 ரூபாயும். பரிசு கோப்பைகளையும் வழங்கப்பட்டது. 


வெற்றி பெற்ற அணிகளுக்கு  பரிசுகளை இண்டர்நேஷனல் குழுமம் சேக் மீரான் மைதீன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணைத் தலைவர் மார்ட்டின், பானு எலெக்ட்ரிக்கல் அபுசாலி ஆகியோர் வழங்கினர். கடையநல்லூர் மசூது தைக்கா பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமது உசேன் நன்றி கூறினார்.

படம் விளக்கம்:

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் முதலிடம் பெற்ற இலஞ்சி அஜய் அணியினை படத்தில் காணலாம்.https://www.sdat.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/