தென்காசி,  நவ.20:

மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

நெல்லை மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனர். 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இப்பள்ளி மாணவர் சிவப்பிரகாசம்  மெட்லி ரிலேயில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும்  பெற்றார்.

இப்பள்ளி மாணவர்கள் பாரத்வ 1,500 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடமும், மெட்லி ரிலேயில்  முதலிடமும், 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றார்.
14 வயதுக்கு உட்பட்டோர்  பிரிவில் இப்பள்ளி மாணவர் அசிம் முஸ்தபா 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் இடம்  பெற்றார்.

மாணவிகள் பிரிவில் இப்பள்ளி மாணவி ரியானா மெர்வின் எறி பந்து போட்டியில் இரண்டாம் இடமும்,  4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும்  பெற்றார். மாணவி மாணிக்கஸ்ரீ  4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம்  பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திண்டுக்கல்லில்  நடைபெற இருக்கும் மாநில அளவிலான தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை   ஆக்ஸ்போர்டு பள்ளி சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளித் தாளாளரு ம் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி.மிரக்ளின் பால்சுசி

பள்ளி தலைமை ஆசிரியை குழந்தை தெரேசா, உதவி தலைமையாசிரியை முனைவர் க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ். கணேசன்,  பால்கன் அத்லெட்டிக் பவுண்டேஷன் செயலாளரும் சர்வதேச தடகள பயிற்சியாளருமான நிகில் சிற்றரசு, உடற்கல்வி ஆசிரியர் செல்வன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் பாராட்டினர். https://www.indianathletics.in


செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today