தென்காசி,  சூலை 18-

நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பரிகாரம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் பலர் தாமிரபரணி ஆற்றில் பழைய துணிகளை கழற்றி போட்டு செல்கின்றனர். இதனால் ஆற்று தண்ணீர் மாசடைந்து வருகிறது.

 இந்நிலையில் ஆற்றில் கிடக்கும் துணிகளை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார பணியாளர்கள் வாரந்தோறும் எடுத்து அகற்றி வருகின்றனர். நேற்று பாபநாசம் பகுதியில் ஆற்றில் இருந்து சுமார் 3 டன் பழைய துணிகளை சுகாதார பணியாளர்கள் அகற்றினர். 

அவை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் காஞ்சனா முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் கணேசன் ஆலோசனையின் பேரில் நகராட்சி குப்பைக்கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today