தென்காசி, ஆக. 11:
தமிழ்நாடு முதலமைச்சர்; ஆணைக்கினங்க தென்காசி மாவட்டம் , கடையநல்லூர்; வட்டம், போகநல்லூர் மற்றும் சங்கரன்கோவில்; வட்டம், களப்பாகுளம் ஊராட்சி ஆத்தியடி விநாயகர் கோவில் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தமிழ்நாடு அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் / ஆணையர் (இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை) ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடையநல்லூர் வட்டம், போகநல்லூரில் உள்ள முகாமில் 121 குடும்பங்கள், 378 நபர்கள் வசித்து வருகின்றனர். சங்கரன்கோவில் வட்டம், களப்பாகுளம் ஊராட்சி ஆத்தியடி விநாயகர் கோவிலில் 49 குடும்பங்கள், 136 நபர்கள் வசித்து வருகின்றனர். இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ்; அரசு அதிகாரிகளுடன் குடியிருப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், பொதுமக்களிடம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, குடியிருப்பு மராமத்து, 100 நாள்
வேலைவாய்ப்பு, முதியோர், விதவை பெண்களுக்கு உதவித்தொகை, பெண் குழந்தைகள் திருமணத்துக்கு நிதி உதவித் தொகை, முகாமிற்கு உள்பகுதியில் ரேஷன் கடை அமைத்தல், கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குதல், வருவாய் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், தெருவிளக்கு, சாலை வசதி, பேருந்து போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இம்முகாமுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். தென்காசி மாவட்டத்தில் வாழும் இலங்கை அகதிகள் இங்கு தொடர்ந்து வாழ்வதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். மீண்டும் இலங்கை செல்ல விரும்புவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் / ஆணையர் (இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை) ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை) ரமேஷ், தென்காசி கோட்டாட்சியர் ராமசந்திரன், சங்கரன்கோவில்; கோட்டாட்சியர் ஹஷ்ரத் பேகம், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே