தென்காசி,  நவ.18:

தென்காசி மாவட்டத்தில் வீட்டுவசதி கழக காவல்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்திற்கு  வீட்டு வசதி கழக காவல்துறை இயக்குனர் ஏ .கே.விஸ்வநாதன் வருகை புரிந்தார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.

பின்னர்காவல்துறை வீட்டுவசதி கழகத்தின் சார்பில் சேர்ந்தமரம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டியுள்ள காவலர் குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்திற்கென தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அமையவிருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளையும், ஆயிரப்பேரியில் அமையவிருக்கும் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கான இடத்தினையும் பார்வையிட்டு இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். https://www.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today