தென்காசி, டிச.17:
தென்காசி ஊராட்சி ஒன்றியம் பாட்டப்பத்து ஊராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை தென்காசி மாவட்ட துணை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாட்டப்பத்து ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூபாய் 25 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மற்றும் இரண்டு சிமெண்ட் சாலைகள், ஒரு வாறுகால் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தென்காசி மாவட்ட துணை ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தென்காசி வட்டாட்சியர் பீட்டர், தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சு.பார்த்தசாரதி, தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தை மணி,பாட்டப்பத்து ஊராட்சி மன்ற தலைவர் மாலதி பொன்னுச்சாமி, தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஹெல்வின், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார்,
சாலை ஆய்வாளர் சாகுல் ஹமீது பாதுஷா, பாட்டப்பத்து ஊராட்சி செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரியம்மாள் மற்றும் பாட்டப்பத்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாரியம்மாள், சக்திகுமார், பாக்கியலட்சுமி மணிகண்டன், சசிகலா, கற்பகவிநாயகம் பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today