நெல்லை, அக். 27:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை மேலப்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இங்கு ஆடு, மாடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். கோழிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

ஒவ்வொரு வாரமும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து ஆடு, மாடுகளை வாங்கிச் செல்வார்கள். மேலும் பண்டிகை காலங்களில் ஆடு, கோழி விற்பனை அதிக அளவில் நடைபெறும். 

இந்த நிலையில் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் சந்தை நடைபெற்றது. ஏராளமான வியாபாரிகள் காலையில் திரண்டு வந்து ஆடு, கோழிகளை விற்பனை செய்தனர். 

ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. சிறிய ஆடுகள் முதல் பெரிய தரமான ஆடுகள் வரை விற்பனைக்கு வந்து இருந்தன. இதில் அதிக அளவில் வெள்ளாடு, செம்மறிஆடு, பல்லாடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர். 

ஒரே நாளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.  https://www.tenkasi.nic.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today